முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல நடிகர் சதீஷ் கௌஷிக் மாரடைப்பால் மறைவு... சோகத்தில் திரையுலகினர்!

பிரபல நடிகர் சதீஷ் கௌஷிக் மாரடைப்பால் மறைவு... சோகத்தில் திரையுலகினர்!

சதீஷ் கௌஷிக்

சதீஷ் கௌஷிக்

தமிழில் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கியவர் சதீஷ் கௌஷிக்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநரருமான சதீஷ் கௌஷிக் உயிரிழந்தது  திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவி மற்றும் அனில் கபூர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மிஸ்டர் இந்தியா பங்கத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சதீஷ் கௌஷிக்.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள சதீஷ் கௌஷிக், பிரபல இயக்குநராகவும் திரையுலகில் வலம் வந்துள்ளார்.

தமிழில் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கியவர் சதீஷ் கௌஷிக் ஆகும். இந்தியில் ’தேரே நாம்’ எனும் பெயரில் ரீமேக் செய்தார். சல்மான் கான், பூமிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

சுமார் 90 படங்களில் நடித்துள்ள சதீஷ் கௌஷிக், 13 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், 66 வயதான அவர் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தகவல்கள் வெளியானது. இவரது இழப்பால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ள பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment