இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 9,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரபல நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்.
தற்போது நன்றாக உணர்கிறேன். தடுப்பூசிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நடிகர் சத்தியாராஜுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.