தெலுங்கு நடிகர் நானி தயாரிக்கும் ஆந்தாலஜியில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த ஆந்தாலஜி மூலம் நானியின் சகோதரி இயக்குனராக அறிமுகமாகிறார்.
நானியின் வால் போஸ்டர் சினிமா இதற்கு முன் பல படங்களை தயாரித்துள்ளது . அதில் ஆந்தாலஜி பாணியில் அமைந்த Awe திரைப்படம் முக்கியமானது . தற்போது மீட் க்யூட் என்ற பெயரில் ஒரு ஆந்தாலஜியை தயாரிக்கிறார் . இதனை அவரது சகோதரி தீப்தி கந்தா இயக்குகிறார் . இது அவரது முதல் படம் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஐந்து வித்தியாசமான கதைகளை கொண்டது இந்த ஆந்தாலஜி . எதிர்பாராத சந்திப்புகளை மையப்படுத்தி இந்த கதைகள் எழுதப்பட்டுள்ளன .
சத்யராஜ் , ரோகிணி , சுனைனா உள்பட 12 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . விஜய் புல்கானி ஒளிப்பதிவு செய்கிறார் .
Also read... ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் இந்தி ரீமேக்கில் அனில் கபூர்...?
ஓடிடியை மனதில் வைத்து இந்த ஆந்தாலஜி தயாராவதால் தமிழ் , தெலுங்கு , கன்னடம் என பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களை தேர்வு செய்துள்ளனர் .
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தயாரிப்பவர் நானி . அவரது இந்த மீட் க்யூட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பலாம் . Published by: Vinothini Aandisamy
First published: August 07, 2021, 14:31 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.