ஹோம் /நியூஸ் /entertainment /

30 ஆண்டுகால நட்பு.. புத்தாண்டில் முதல் சந்திப்பு.. விஜயகாந்த் வீட்டுக்கே சென்று வாழ்த்து சொன்ன சத்யராஜ்!

30 ஆண்டுகால நட்பு.. புத்தாண்டில் முதல் சந்திப்பு.. விஜயகாந்த் வீட்டுக்கே சென்று வாழ்த்து சொன்ன சத்யராஜ்!

சத்யராஜ்- விஜயகாந்த் சந்திப்பு

சத்யராஜ்- விஜயகாந்த் சந்திப்பு

புத்தாண்டு தினத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ் திரைத் துறையில் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் விஜயகாந்த், சத்யராஜ். கதாநாயகன் ஆவதற்கு முன்பாக விஜயகாந்தின் சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடங்களில்  சத்யராஜ் நடித்துள்ளார். விஜயகாந்தை செல்லமாக விஜி என்றே எப்போதும் அழைப்பார் சத்யராஜ். அந்த அளவுக்கு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பெரிய அளவில் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார் விஜயகாந்த். முக்கிய நாட்களில் அவரை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சந்திக்கும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகும்.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரை நடிகர் சத்யராஜ், தியாகு உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். விஜயகாந்துக்கு பொன்னாடை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் சத்யராஜ். இருவரும் கரங்களைப் பற்றியபடி சிறிது நேரம் பேசியது அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனிருந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து விஜயகாந்த் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor sathyaraj, New Year 2023, Vijayakanth