ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சத்யராஜுடன் இணையும் வசந்த் ரவி - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சத்யராஜுடன் இணையும் வசந்த் ரவி - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வெப்பன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெப்பன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சத்யராஜ் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சத்யராஜ் தற்போது நடிக்கும் வெப்பன் என்ற திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் சத்யராஜ் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி,  பாகுபலி உள்ளிட்ட பல படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.

அந்த வரிசையில் தற்போது வெப்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் ராக்கி திரைப்படத்தின் நாயகன் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை குகன் சென்னியப்பன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதேபோல் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

Also read... பீஸ்ட்டால் அடிவாங்கும் வாரிசு? விற்பனையில் சறுக்கும் விஜய் படம்!

வெப்பன் திரைப்படத்தின் நேற்று வெளியிடப்பட்டுள்ள முதல் பார்வை சத்யராஜின் பிறந்த நாளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியோ, மற்ற தகவலையோ பட குழுவினர் பகிரவில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்துடன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் இயக்குனர் சத்யராஜுடன் இணைந்து பணியாற்றுவது மிகப் பெரிய கவுரவம் எனவும், இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது எனவும் நடிகர் வசந்த ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor sathyaraj, Actor Vasanth Ravi, First look