ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளியீட்டுக்கு தயாரான சத்யராஜ், சீதாவின் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்!

வெளியீட்டுக்கு தயாரான சத்யராஜ், சீதாவின் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்!

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்

மை பெர்பெக்ட் ஹஸ்பன்ட் வெப் தொடரை டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் எதிர்பார்க்கலாம். நகைச்சுவை கலந்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சத்யராஜ், சீதா நடித்திருக்கும் வெப் தொடர் மை பெர்பெக்ட் ஹஸ்பன்ட். இந்தத் தொடர் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஸீ 5, டிஸ்னி + ஹாட் ஸ்டார், சோனிலிவ் உள்பட அனைத்து ஓடிடி தளங்களும் தமிழில் வெப் தொடர்கள் தயாரிக்கின்றன. அமேசான் பிரைம் வீடியோ கதிர் நடிப்பில் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ளது. விரைவில் அது வெளிவர உள்ளது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஒரு தொடரை தயாரித்து வருகிறார். இதேபோல் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் சத்யராஜ், சீதா நடிப்பில் மை பெர்பெக்ட் ஹஸ்பன்ட் என்ற வெப் தொடரை தயாரித்தது. இதனை இயக்குனர் தாமிரா இயக்கி வந்தார். கொரோனா இரண்டாம் அலையில் நோய்த்தொற்றுக்கு உள்ளான அவர் உயிரிழந்தார். இதனால் வெப் தொடர் வேலைகள் பாதிக்கப்பட்டன. தாமிராவின் மறைவுக்குப் பின் நீண்ட ஆலோசனைக்குப் பின் அந்தத் தொடரை இயக்கும் பொறுப்பு இயக்குனர் நிர்மல் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர். தற்போது தொடர் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் விரைவில் மை பெர்பெக்ட் ஹஸ்பன்ட் வெப் தொடரை டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் எதிர்பார்க்கலாம். நகைச்சுவை கலந்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. சுகன்யா, லிவிங்ஸ்டன் போன்றவர்களும் இதில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் வெளியீட்டு தேதியை எதிர்பார்க்கலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor sathyaraj, Disney