முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 36 வருடங்களை நிறைவு செய்த சத்யராஜ், அம்பிகாவின் ரசிகன் ஒரு ரசிகை!

36 வருடங்களை நிறைவு செய்த சத்யராஜ், அம்பிகாவின் ரசிகன் ஒரு ரசிகை!

ரசிகன் ஒரு ரசிகை

ரசிகன் ஒரு ரசிகை

ரசிகன் ஒரு ரசிகைக்கு முன்புவரை சத்யராஜ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கு முன்பு வெளியான சாவி திரைப்படத்திலும் அவர் வில்லனாக தான் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சரியாக முப்பத்தி ஆறு வருடங்களுக்கு முன்பு 21-02-1986ல் ரசிகன் ஒரு ரசிகை திரைப்படம் வெளியானது. பாலு ஆனந்த் படத்தை இயக்கியிருந்தார். வாசன் புரொடக்ஷன்ஸ்  படத்தை தயாரித்திருந்தது.

இயக்குனர் பாலு ஆனந்த் இன்டீரியர் டெக்கரேஷன் படித்தவர். கன்னட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பிறகு தமிழுக்கு வந்து பலரிடம் உதவியாளராக இருந்து, இறுதியில் ஆர் சுந்தர்ராஜனிடம் உதவி இயக்குனரானார். அவரது முதல் திரைப்படம் விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி.

பாலு ஆனந்தின் சொந்த ஊர் கோயம்புத்தூர். சத்யராஜும் அதே ஊரைச் சேர்ந்தவர். அதனால் இருவருக்குள்ளும் ஏற்கனவே நட்பு இருந்தது.

அதன் அடிப்படையில் ரசிகன் ஒரு ரசிகை கதையை சத்யராஜிடம் பாலு ஆனந்த் கூறியுள்ளார். கதையை கேட்டவர், இது ரொம்ப சீரியஸா இருக்கு. ஆர் சுந்தர்ராஜன் அசிஸ்டன்ட் என்றால் காமெடியை தான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதனால் முதலில் அப்படி ஒரு படத்தை செய்துவிட்டு பிறகு இதை செய் என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் வைதேகி காத்திருந்தாள் பட தயாரிப்பாளர்கள் இவரிடம் படம் செய்ய கேட்க, தனது முதல் படமாக சத்யராஜின் அறிவுரைப்படி நகைச்சுவை கலந்த, நானே ராஜா நானே மந்திரி படத்தை இயக்கினார். விஜயகாந்த் நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்குப் பிறகு வாசன் பிரதர்ஸ், பாலு ஆனந்தை அணுகி தங்களுக்கு ஒரு படம் செய்ய கேட்க, ரசிகன் ஒரு ரசிகை கதையைக் கூறியிருக்கிறார். கதை அவர்களுக்கு பிடித்துப் போக பட வேலைகள் ஆரம்பம் ஆனது.

rasigan oru rasigai wikipedia, rasigan oru rasigai starmusiq, rasigan oru rasigai music director, rasigan oru rasigai songs, rasigan oru rasigai mp3 songs free download starmusiq, rasigan oru rasigai songs download masstamilan, rasigan oru rasigai cast, rasigan movie download kuttymovies, ரசிகன் ஒரு ரசிகை, சத்யராஜ், அம்பிகா, சத்யராஜ் திரைப்படங்கள்
ரவீந்திரன்

ரசிகன் ஒரு ரசிகை இசையை பின்னணியாக கொண்ட திரைப்படம். இதில் பாடகியாக அம்பிகா வருவார். இந்த படப்பிடிப்பின்போது அம்பிகா காதில் வாக்மேன் மாட்டி பாடல் கேட்டுக் கொண்டிருந்திக்கிறார். எப்பொழுதும் இப்படி பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று பாலு ஆனந்த், அப்படி என்னதான் கேட்கிறாய் என்று கேட்டிருக்கிறார். அம்பிகா கேட்டுக்கொண்டிருந்தது மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் ரவீந்திரன் மாஸ்டர் இசையமைத்த பாடல். அதை கேட்ட பாலு ஆனந்த், இவரையே நம்ம படத்துக்கும் போட்டிடலாம் என ரவீந்திரன் மாஸ்டரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ரவீந்திரன் மாஸ்டர் ஹேமாவின் காதலர்கள், கண்மணியே பேசு என ஏற்கனவே தமிழில் இரு படங்கள் செய்திருந்தாலும் ரசிகன் ஒரு ரசிகை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழைதேடித் தந்தது. முக்கியமாக ஏழிசை கீதமே  பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாடல் போட்டிகளில் இந்தப் பாடலை யார் பாடினாலும் அவருக்கு பரிசு கிடைக்கும் என்ற  நிலை அன்று இருந்தது. பாடி அழைத்தேன் உள்பட படத்தின் பிற பாடல்களும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

ரசிகன் ஒரு ரசிகைக்கு முன்புவரை சத்யராஜ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கு முன்பு வெளியான சாவி திரைப்படத்திலும் அவர் வில்லனாக தான் நடித்திருந்தார். முதல்முறையாக அவர் நாயகனாக அதுவும் நல்லவராக நடித்தது ரசிகன் ஒரு ரசிகை திரைப்படத்தில் தான். தயாரிப்பாளருக்கும், விநியோகித்தவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் ரசிகன் ஒரு ரசிகை லாபத்தை சம்பாதித்து தந்தது.  சரியாக முப்பத்தி ஆறு வருடங்களுக்கு முன்னால் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் கேட்கும்படியும், ரசிக்கும்படியும் இருப்பதுதான் இந்தப் படத்தின் மிகச் சிறந்த அம்சம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor sathyaraj