வசூல் வேட்டைக்குத் தயார் - விஸ்வாசம் டீம் நேரடி சவால்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

news18
Updated: January 9, 2019, 7:09 PM IST
வசூல் வேட்டைக்குத் தயார் - விஸ்வாசம் டீம் நேரடி சவால்
அஜித்
news18
Updated: January 9, 2019, 7:09 PM IST
விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வசூல் வேட்டைக்குத் தயார் என்ற புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா 'நிரஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் அஜித்தின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை விஸ்வாசம் வெளியாகிறது. ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே அதற்கான கொண்டாட்டத்தை ரசிகர்கள் தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளனர்.

அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் வசூல் வேட்டைக்குத் தயார் என்ற புதிய போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பேட்ட படத்துடன் விஸ்வாசம் வெளியாவதால் இதை ஒரு சவாலாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
Loading...


குடும்ப கதையை பேசும் விஸ்வாசம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்ற கேள்விக்கு நாளை விடைகிடைத்துவிடும்.

பேட்டையா? விஸ்வாசமா?... ரசிகர்களின் சாய்ஸ் என்ன - வீடியோ

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...