• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹிப் ஹாப் ஆதியியை வைத்து ஹாட்ரிக் அடித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் - இயக்குனர் யார் தெரியுமா?

ஹிப் ஹாப் ஆதியியை வைத்து ஹாட்ரிக் அடித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் - இயக்குனர் யார் தெரியுமா?

ஹிப் ஹாப் ஆதி

ஹிப் ஹாப் ஆதி

பெரிய நட்சத்திரங்களை வைத்து சத்யஜோதி எடுத்த தொடரி போன்ற படங்கள் அவர்களுக்கு கடும் நஷ்டத்தை கொடுத்தன.

  • Share this:
    சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஹிப் ஹாப் ஆதியை வைத்து ஏற்கனவே இரு படங்களை எடுத்த நிலையில் மூன்றாவது படத்தை அறிவித்துள்ளது.

    சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தை தயாரித்து வருகிறது. அத்துடன் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் அன்பறிவு என்ற படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படம் அண்டர் புரொடக்ஷனில் இருந்த நேரம் சிவகுமாரின் சபதம் படத்தை அறிவித்தனர். சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்ததுடன் அதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து, இயக்கினார் ஹிப் ஹாப் ஆதி. செப்டம்பர் 30-ல் படம் வெளியாகி பரவலான வசூலை பெற்றது. சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு படத்தால் நல்ல லாபம்.

    ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் அன்பறிவு படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. மரகத நாணயம் படத்தை இயக்கிய சரவண் இந்தப் படத்தை இயக்குகிறார். 2022-ல் படம் திரைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.

    Sathya Jyothi Films hits a hat trick with hip hop Aadhi, Hip Hop Adhi,  Sivakumarin Sabadham, sivakumarin sabatham hip hop Aadhi, sivakumarin sabatham songs, sivakumarin sabatham movie, sivakumarin sabatham director, sivakumarin sabatham wikipedia,  சிவகுமாரின் சபதம், சிவகுமாரின் சபதம் ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் ஆதி சிவகுமாரின் சபதம், sathya jyothi films production manager, sathya jyothi films producer, sathya jyothi films owner, sathya jyothi films serials, sathya jyothi films production executive, sathya jyothi films upcoming movies
    சத்யஜோதி ஃபிலிம்ஸ்


    பெரிய நட்சத்திரங்களை வைத்து சத்யஜோதி எடுத்த தொடரி போன்ற படங்கள் அவர்களுக்கு கடும் நஷ்டத்தை கொடுத்தன. அதேநேரம் ஹிப் ஹாப் ஆதியின் மினிமம் பட்ஜெட் படங்கள் லாபத்தை சம்பாதித்து கொடுக்கின்றன. குறைந்த பட்ஜெட், மினிமம் நாள்கள், நல்ல லாபம் என்ற ஃபார்முலா வொர்க் அவுட்டாவதால் தொடர்ந்து அவரை வைத்தே படங்கள் தயாரிக்கிறார்கள்.

    படம் குறித்த மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: