சாத்தான்குளம் சம்பவம் - ஜெயராஜ் குடும்பத்திடம் உருக்கமாக பேசிய ரஜினி

போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் மரணமடைந்த ஜெயராஜ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம்  - ஜெயராஜ் குடும்பத்திடம் உருக்கமாக பேசிய ரஜினி
ரஜினிகாந்த்
  • Share this:
தமிழகத்தில் கோவில்பட்டியை அடுத்துள்ள சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையும் தமிழக அரசும் உடல்நலக்குறைவால்தான் இருவரும் மரணம் அடைந்தார்கள் என கூறி வந்தாலும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என ஊர்மக்களும் உறவினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தந்தை மகன் இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் இவ்விவகாரம் தமிழகம் தாண்டி சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.




இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் அவர்களிடம் இரங்கல் தெரிவித்ததாக சென்னை முன்னாள் மேயரும், ரஜினிகாந்தின் நண்பருமான கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அதேபோல் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.



மேலும் படிக்க: போலீசை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் – சிங்கம் பட இயக்குநர் ஹரி

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது சமூகவிரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து விமர்சனங்களுக்குள்ளானது. அப்போது காவல்துறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் சாத்தான்குளம் சம்பவத்தில் மவுனம் காப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading