நீதி கிடைக்க வேண்டும்.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு குரல் எழுப்பும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..

சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குரல் எழுப்பியுள்ளார்

நீதி கிடைக்க வேண்டும்.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு குரல் எழுப்பும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..
விஜய் உடன் லோகேஷ் கனகராஜ்
  • Share this:
தமிழகத்தில் கோவில்பட்டியை அடுத்துள்ள சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையும் தமிழக அரசும் உடல்நலக்குறைவால்தான் இருவரும் மரணம் அடைந்தார்கள் என கூறி வந்தாலும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என ஊர்மக்களும் உறவினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தந்தை மகன் இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வியாபாரிகள் வலியுறுத்தி வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். #JusticeForJayarajandBennicks என்ற ட்விட்டர் ஹேஷ்டேக் மூலம் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.



மேலும் படிக்க: போலீஸ் வன்முறையை நியாயப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் - பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பின்னர் சினிமா சூழல் மாறுமா ?

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகர் சூர்யா நீண்ட அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதை டேக் செய்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “கேட்கும்போதே மனது பதறுகிறது. வலியால் துடித்து இறந்தவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading