போலீசை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் – சிங்கம் பட இயக்குநர் ஹரி

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்களை எடுத்ததற்காக வேதனைப்படுவதாக இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.

போலீசை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் – சிங்கம் பட இயக்குநர் ஹரி
இயக்குநர் சூர்யாவுடன் ஹரி
  • Share this:
தமிழகத்தில் கோவில்பட்டியை அடுத்துள்ள சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறையும் தமிழக அரசும் உடல்நலக்குறைவால்தான் இருவரும் மரணம் அடைந்தார்கள் என கூறி வந்தாலும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என ஊர்மக்களும் உறவினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தந்தை மகன் இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வியாபாரிகள் வலியுறுத்தி வரும் நிலையில் திரைநட்சத்திரங்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். #JusticeForJayarajandBennicks என்ற ட்விட்டர் ஹேஷ்டேக் மூலம் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.


மேலும் படிக்க: போலீஸ் வன்முறையை நியாயப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் - பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பின்னர் சினிமா சூழல் மாறுமா ?

இதனிடையே, தமிழ் சினிமாவில் போலீஸ் வன்முறையை ஹீரோயிசமாக காட்டுவதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் கண்டுக் கொள்ளப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநர் ஹரி,  "சாத்தான்குளம் சம்பவம்போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்சனை தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading