Home /News /entertainment /

ஷங்கர் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமை ரூ.200 கோடிகளுக்கு விற்பனை?

ஷங்கர் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமை ரூ.200 கோடிகளுக்கு விற்பனை?

ராம் சரண் - சங்கர்

ராம் சரண் - சங்கர்

Shankar Movie : ராம் சரண் நடிப்பில் சங்கர் இயக்கும் படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளை 200 கோடிகளுக்கு ஸீ நெட்வொர்க் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் பான் - இந்தியா திரைப்படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை ஸீ நெட்வொர்க் 200 கோடிகளுக்கு விலை பேசியிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்தை பாதியில்விட்டு, ராம் சரண் நடிப்பில் புதிய படத்தை ஆரம்பித்தார் ஷங்கர். ஆர்சி15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சுமார் 170 கோடிகள் பட்ஜெட்டில் தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார். கியாரா அத்வானி, அஞ்சலி, ரகுமான், ஜெயராம் உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் அனைத்து மொழிகளின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளை 200 கோடிகளுக்கு ஸீ நெட்வொர்க் விலை பேசியிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.



இந்த 200 கோடியில் ஓடிடி உரிமையும் அடக்கம் என்கின்றனர். படத்தின் பட்ஜெட் 170 கோடிகள் எனும் போது திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே தயாரிப்பாளருக்கு 30 கோடிகள் இதன் மூலம் லாபம் கிடைக்கும்.

also read : கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு செல்ஃபி பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்..

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இந்த வியாபாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. 2023 சங்கராந்தியை (பொங்கல்) முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்த பின் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Ram Charan

அடுத்த செய்தி