Home /News /entertainment /

சசிகுமார், விக்ராந்த் இணையும் புதிய படம்!

சசிகுமார், விக்ராந்த் இணையும் புதிய படம்!

சசிகுமார் - விக்ராந்த்

சசிகுமார் - விக்ராந்த்

படம் க்ரைம் பின்னணியைக் கொண்டது என்பதை சட்டை முழுக்க ரத்தத்துடன் நிற்கும் சசிகுமாரின் புகைப்படம் சொல்கிறது.

சசிகுமாரும், நடிகர் விக்ராந்தும் முதல்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

சசிகுமார் நடிப்பில் இந்த வருடம் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் படங்கள் வெளியாகின. முந்தையது நேரடியாக ஓடிடியிலும், இரண்டாவது படம் திரையரங்குகளிலும் வெளியானது. இரண்டு படங்களுமே பெரும் தோல்வியை சந்தித்தன. இதற்கு முன் சசிகுமார் நடிப்பில் வெளியான ஒரு டஜன் படங்களும் தோல்விப் படங்களே. கடைசியாக அவரது நடிப்பில் வெற்றி பெற்ற படம் எது என்று கேட்டால் சசிகுமாருக்கே ஞாபகம் இருக்குமா தெரியவில்லை.

இந்நிலையில், சசிகுமாரின்  புதிய  படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அவருடன் விக்ராந்த் இணைந்து நடித்துள்ளார். விக்ராந்த் தனி ஹீரோவாக இல்லாமல் இப்படி வேறொரு ஹீரோவுடன் இணைகையில் பாண்டி நாடு மாதிரி படம் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. இந்தப் படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா எழுதி இயக்கியுள்ளார். செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை உரிமையை திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது ஒரு நல்ல அம்சம்.

Sasikumar, Vikranth to team up for new movie, sasikumar new movie, sasikumar, sasikumar vikranth, sasikumar vikranth movie, sasikumar sathyasiva movie, சசிகுமார், சசிகுமார் விக்ராந்த் திரைப்படம், சசிகுமார் புதிய படம், விக்ராந்த் படம்

மேலும் படிக்க - பரம்பரை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ’நான் ஈ’ நடிகை ஹம்சா நந்தினி

இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நாளை வெளியிடுகின்றனர். படம் க்ரைம் பின்னணியைக் கொண்டது என்பதை சட்டை முழுக்க ரத்தத்துடன் நிற்கும் சசிகுமாரின் புகைப்படம் சொல்கிறது. சசிகுமாரின் சமீபத்திய படங்கள் எதுவும் வரவேற்பு பெறாத நிலையில் சத்ய சிவாவின் இந்தப் படம் ரசிகர்களை திருப்தி செய்யுமா? இது சசிகுமாரின் 21 வது படம் என்பது கூடுதல் தகவல்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி