ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாடல்கள் இல்லாமல் தயாராகும் சசிகுமாரின் காமன் மேன்...!

பாடல்கள் இல்லாமல் தயாராகும் சசிகுமாரின் காமன் மேன்...!

சசிகுமாரின் காமன் மேன்

சசிகுமாரின் காமன் மேன்

காமன் மேனை கழுகு, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார். டிசம்பர் 24 படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சசிகுமார் படங்கள் என்றால் கிராமம், சாதிய பின்புலம், முறுக்கிய மீசை, தொடை தெரியும் வேட்டி கட்டு என ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதிலிருந்து முற்றிலும் விலகி தயாராகியுள்ளது காமன் மேன்.

காமன் மேனை கழுகு, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார். டிசம்பர் 24 படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சசிகுமார் சினிமா சவுண்ட் இன்ஜினியராக வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் இசைக்கருவிகளின் துல்லிய ஒலிக்கு ஹாரிஸ் ஜெயராஜ், ரஹ்மானுக்கு அடுத்தப்படி இருப்பவர் ஜிப்ரான். இவர் இசையமைக்கும் பாடல்கள், பின்னணி இசை ஒலிகளின் துல்லியம் அபாரமானது. ஆனால், காமன் மேனில் பாடல்கள் இல்லை. அதேநேரம் படத்தில் வித்தியாசமான ஒலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சத்யசிவா கூறியுள்ளார்.

Also read... வலிமை இந்தி போஸ்டர் - வதந்திகளை பொய்யாக்கிய போனி கபூர்!

காமன் மேனில் சசிகுமாருடன் முக்கிய வேடத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். நாயகியாக ஹரிப்ரியா. அதிகம் கிராமத்து வேடங்களில் நடித்த சசிகுமாருக்கு காமன் மேன் படத்தின் கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. அதுபோல் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என சத்ய சிவா கூறியுள்ளார்.

Also read... காஸ்ட்லி வில்லனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா...!

கொரோனா லாக் டவுனின் போது இந்தக் கதையை எழுதியதாகவும், குறகிய காலத்தில் படத்தை எடுத்து முடித்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Sasikumar