முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாரதிராஜா, பாலா கைவிட்ட குற்றப்பரம்பரையை படமாக்கும் சசிகுமார்?

பாரதிராஜா, பாலா கைவிட்ட குற்றப்பரம்பரையை படமாக்கும் சசிகுமார்?

சசிக்குமார்

சசிக்குமார்

சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பாரதிராஜாவும், பாலாவும் படமாக்க ஆசைப்பட்ட குற்றப்பரம்பரை படத்தை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சசிகுமார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் அரசாங்கத்தால் கொல்லப்பட்டர்கள். இந்த வரலாறை கதாசிரியர் ரத்னகுமாரின் எழுத்தில், பாரதிராஜா படமாக்க முயன்றார். உசிலம்பட்டி அருகே பிரமாண்ட பூஜையும் போட்டார்.

அதேநேரம் பாலா எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றம்பரம்பரையினர் குறித்த நாவலின் அடிப்படையில் ஒரு படத்தை எடுக்க முயன்றார். இதன் காரணமாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே 2016-ல் கருத்து மோதல் ஏற்பட்டது. பாலா பொதுமேடையில் பாரதிராஜாவை பகிரங்கமாக எச்சரித்தார். அதன் பிறகு இருவருமே குற்றப்பரம்பரை கதையை கைகழுவினர்.

தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். சசிகுமார் இந்தப் படத்தை இயக்க வாய்ப்புள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தை சசிகுமார் இயக்க அதிக வாய்ப்புள்ளது. அவரே பிரதான வேடத்தில் நடிக்கவும் செய்யலாம்.

பாரதிராஜா, பாலா என இரு திரை ஆளுமைகள் ஆசைப்பட்டு நடக்காமல் போன புராஜெக்ட் குற்றப்பரம்பரை. அது சசிகுமாரின் முயற்சியில் படமாகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Sasikumar, Director bala, Director bharathiraja