சரத்குமார் - சசிகுமார் இணையும் ’நா நா’ - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

news18
Updated: July 11, 2019, 3:33 PM IST
சரத்குமார் - சசிகுமார் இணையும் ’நா நா’ - ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
சசிகுமார் | சரத் குமார்
news18
Updated: July 11, 2019, 3:33 PM IST
சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

சலீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிர்மல்குமார், அரவிந்த்சாமியை ஹீரோவாக வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கினார். இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்னையில் சிக்கி இருப்பதால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

இந்த இரண்டு படங்களை அடுத்து சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு ‘நா நா’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.சசிகுமார் நடிப்பில் ஏற்கெனவே எனை நோக்கி பாயும் தோட்டா, கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப், நாடோடிகள் 2 ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து ’நா நா’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மட்டும் தெலுங்கிலும் உருவாகி வருகிறது.

வீடியோ பார்க்க: பெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்த ஹீரோக்கள்!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...