பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் - சசிகுமாருக்கு ஜோடியாகும் மிருணாளினி!

பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் - சசிகுமாருக்கு ஜோடியாகும் மிருணாளினி!
எம்ஜிஆர் மகன் படக்குழு
  • News18
  • Last Updated: September 25, 2019, 12:54 PM IST
  • Share this:
பொன்ராம் - சசிக்குமார் கூட்டணியில் உருவாகும் எம்ஜிஆர் மகன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன் என வரிசையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்தபடத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

எம்ஜிஆர் மகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார். டப்ஸ்மேஷ் மூலம் பிரபலமான இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.


மேலும் இந்தப் படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.



இந்தப் படத்தை அடுத்து விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து பொன்ராம் படம் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ பார்க்க: என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல்

First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...