• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழ் சீரியல் நடிகைக்கு வளைகாப்பு - கலந்து கொண்ட முக்கிய நட்சத்திரங்கள்!

தமிழ் சீரியல் நடிகைக்கு வளைகாப்பு - கலந்து கொண்ட முக்கிய நட்சத்திரங்கள்!

சீரியல் நடிகைக்கு வளைகாப்பு

சீரியல் நடிகைக்கு வளைகாப்பு

தமிழ் சின்னத்திரை நடிகையான சசிகலா நாகராஜன், தொகுப்பாளினியாக மீடியாவுக்குள் நுழைந்தார். கலைஞர் டிவி, கேப்டன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

  • Share this:
    தமிழ் சீரியல் நடிகையான சசிகலாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தியுள்ளனர்.

    தமிழ் சின்னத்திரை நடிகையான சசிகலா நாகராஜன், தொகுப்பாளினியாக மீடியாவுக்குள் நுழைந்தார். கலைஞர் டிவி, கேப்டன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் தொகுத்து வழங்கியதில் ஒளிமயமான எதிர்காலம் என்ற நிகழ்ச்சி நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் ‘குல தெய்வம்’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் சசிகலா நாகராஜனுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.




    அடுத்ததாக யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த சசிகலா, ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை சீரியலில் மேக்னாவாக நடித்து அசத்தினார். இந்த தொடர் அவருக்கு செம ரீச் கொடுத்தது. மேக்னாவாக நடித்தார் என்பதைவிட அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தார் எனலாம். அவர், திரைப்படத்துறையில் இருக்கும் பிரபகாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தாய்மை அடைந்திருக்கும் சசிகலாவுக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சின்னத்திரை பிரபலங்களான நிவாஷினி திவ்யா, ஸ்வேதா சுப்ரமணியன், ஸ்ரீதர் அசோக், தீபக்குமார், இந்திரன், நீலிமா இசை மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பிரபாகரன் - சசிகலா தம்பதியினரை வாழ்த்தினர். வளைக்காப்பு நிகழ்ச்சி முன்பாகவே கணவருடன் இணைந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்திய சசிகலா, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

    அப்போதே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்பங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், தம்பதியினர் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளனர்.




    பிரபகாரன், வெள்ளித்திரையில் மதுரை மாவட்டம், திருட்டு விசிடி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். சசிகலா நடித்த என்றென்றும் புன்னகை சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதில் நிதின், தீபக் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்ளில் நடித்து வருகின்றனர். தாய்மை அடைந்திருப்பதால், இப்போதைக்கு சீரியல்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருக்கும் சசிகலா, குழந்தை பெற்றெடுத்த பிறகு மீண்டும் சீரியலில் களமிறங்கும் முடிவில் இருக்கிறார்.

    Also read... அரண்மனை 3 படம் எப்படி இருக்கிறது? ட்விட்டர் விமர்சனம்!

    கணவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தயாரிப்பாளராக இருக்கும் அவர், திருட்டு விசிடி படத்தில் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார். இந்தப் படம் தான் சாக்ஷி அகர்வாலுக்கு முதல் தமிழ் படம். தயாரிப்பு தாமதங்களினால் அவர் நடித்த மற்ற திரைப்படங்கள் வெளியாகின. காதல் சுகுமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். நடிகர் செந்தில் மற்றும் தேவதர்ஷிணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: