• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • களத்தில் இறங்கிய கலைஞர் தொலைக்காட்சி - முதல் படமாக சார்பட்டா பரம்பரையை வாங்கியது!

களத்தில் இறங்கிய கலைஞர் தொலைக்காட்சி - முதல் படமாக சார்பட்டா பரம்பரையை வாங்கியது!

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரையை இயக்குனர் இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸும், கே9 ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்திருந்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
சன், விஜய், ஸீ என ஒருசில முன்னணி தொலைக்காட்சிகள் மட்டுமே புதிய பெரிய பட்ஜெட் படங்களை வாங்கிக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கியிருந்த கலைஞர் தொலைக்காட்சி மீண்டும் களத்துக்கு வந்துள்ளது.

பல பெரிய படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்குவதற்கு கலைஞர் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல் படமாக சார்பட்டா பரம்பரையை வாங்கியிருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தத்தை நடிகர் ஆர்யா நேரில் பெற்றுக் கொண்டார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருடம் வெளியான படங்களில் கர்ணனும், சார்பட்டா பரம்பரையும் அதிக அளவில் விமர்சனத்தை சந்தித்தன. சார்பட்டா பரம்பரையில் மிசா காலத்து அரசியல் மேலோட்டமாக தூவப்பட்டிருந்தது அரசியல் கட்சியினருக்கு குறிப்பாக திமுகவினருக்கு மகிழ்ச்சியையும், அதிமுகவினருக்கு எரிச்சலையும் அளித்தது. இரு தரப்பினரும் கருத்து மோதலில் இறங்கினர்.



Also read... அனபெல் சேதுபதி பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்நிலையில், உதயநிதியின் முயற்சியால் சார்பட்டா பரம்பரையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இந்தத் தகவலை தெரிவித்துள்ள நடிகர் ஆர்யா, உதயநிதிக்கு நன்றி கூறியுள்ளார்.

சார்பட்டா பரம்பரையை இயக்குனர் இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸும், கே9 ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்திருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: