Sarpatta: சார்பட்டா பரம்பரை ரிலீஸ் - ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு

பா.ரஞ்சித் - ஆர்யா

ஆர்யா, பசுபதி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிட ரஞ்சித் முடிவு செய்துள்ளார்.

  • Share this:
    இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சார்பட்டா பரம்பரை. அப்படத்தின் வெளியீடு குறித்து அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

    அட்டக்கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் கபாலி, காலா படங்களில் ரஜினியின் இமேஜுக்கேற்ப சில காம்ப்ரமைஸ்கள் செய்திருந்தார். மெட்ராஸ் போன்று ஒரு படத்தை அவர் எப்போது தருவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அதை நிறைவேற்றும் வகையில் அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் இயங்கி வந்த பாக்ஸிங் அணிகளை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித். கே9 ஸ்டுடியோஸுடன் இணைந்து ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

    ஆர்யா, பசுபதி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிட ரஞ்சித் முடிவு செய்துள்ளார். திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போவதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அமேசான் பிரைம் வீடியோ பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தாலும் தமிழகத்தில் தினசரி தொற்றுப் பாதிப்பு இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளது. சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அக்டோபர், நவம்பரில் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக் கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நெருக்கடியில் திரையரங்குகள் திறந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க திரையரங்குகளுக்கு செல்வார்களா என்பது சந்தேகம். கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள் வட்டி சுமையிலிருந்து தப்பிக்க ஓடிடியில் படத்தை வெளியிடுவது ஒன்றே வழி. வரும் நாள்களில் மேலும் பல படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: