என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் - நடிகர் பசுபதி

ஆர்யா - பசுபதி

நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

 • Share this:
  என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் என நடிகர் பசுபதி கூறியுள்ளார். 

  இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. 1970களின் பிற்பகுதில் நடக்கும் கதையான சார்பட்ட பரம்பரை, குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி, டான்சிங் ரோஸ், கெவின் டாடி என படத்தில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கபிலனாக ஆர்யா, ரங்கன் வாத்தியாராக பசுபதி ஆகியோர் நடிப்பில் மிரட்டியுள்ளார். என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் என நடிகர் பசுபதி குறிப்பிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக நடிகர் பசுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

  என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல” எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: