வேற லெவல் நீங்க... ஆர்யாவை நினைத்து பெருமைப்படும் மாமியார்

வேற லெவல் நீங்க... ஆர்யாவை நினைத்து பெருமைப்படும் மாமியார்

குடும்பத்தினருடன் ஆர்யா

பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தின் கேரக்டர்கள் அறிமுக வீடியோவைப் பார்த்த சாயிஷாவின் தாயார் தனது மருமகன் ஆர்யாவை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கிய பா.ரஞ்சித் அடுத்ததாக ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கியுள்ளார்.

  சார்பட்டா பரம்பரை என்ற பெயரில் வடசென்னையின் குத்துச் சண்டையை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் ஜான் கொக்கேன், சந்தோஷ், பசுபதி, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது படத்தின் கேரக்டர்கள் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கேன் வேம்புலியாகவும், கலையரசன் வெற்றிச் செல்வனாகவும், பசுபதி ரங்கன் வாத்தியாராகவும், துஷாரா விஜயன் மாரியம்மாவாகவும், காளி வெங்கட் கோனி சந்திரனாகவும் நடித்துள்ளனர்.

  படத்தில் நடித்த நடிகர்கள் முறையாக குத்துச்சண்டை பயிற்சி பயிற்சி எடுத்துக் கொண்டதும் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படக்குழுவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  கதாபாத்திர அறிமுகத்தை வீடியோவாக வெளியிட்டிருப்பதைப் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் பா.ரஞ்சித், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆர்யாவின் மாமியார் ஷஹீன் பானு தனது ட்விட்டர் பக்க பதிவில், ஆர்யாவின் வொர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டு “அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புத்திசாலித்தனம் அதனுடைய உச்சம் இது. நீங்கள் எங்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். நீங்கள் அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளீர்கள். மிகவும் திறமையான இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து மிகச் சிறப்பான கதாபாத்திரம் உங்களுக்கு கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.  தனது மாமியாரின் புகழ்ச்சிக்கு மருமகன் ஆர்யா நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: