Actor Maran Death: மறைந்த நடிகர் மாறனின் பல்லாண்டு காத்திருப்புக்கு கிடைத்த பலன்

ரஜினிகாந்துடன் மறைந்த நடிகர் மாறன்

அந்த படங்கள் வெளிவருவதற்குள் இவர் இயற்கை எய்தியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான மாறன் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மாறனுக்கு வயது 48. கில்லி படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்திலும், வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் நண்பராகவும் நடித்ததன் மூலம் இவர் புகழ் பெற்றார். தலைநகரம் படத்தில் வடிவேலு சொல்லும் நானும் ரவுடிதான் நகைச்சுவை காட்சி இவரை பெரிதும் பிரபலப்படுத்தியது.

    திரையுலகில் பல ஆண்டு காத்திருப்புக்கு பலனாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை, ப்ளூ சட்டை மாறனின் ஆன்ட்டி இந்தியன் ஆகிய படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்திருந்தது. ஆனால் அந்த படங்கள் வெளிவருவதற்குள் இவர் இயற்கை எய்தியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தினம் வரும் சினிமா பிரபலங்களின் மரண செய்தி ரசிகர்களை பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: