• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Pa Ranjith: ’உன் மகளை தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை’ மாறன் மரணத்துக்கு பா.ரஞ்சித் இரங்கல்

Pa Ranjith: ’உன் மகளை தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை’ மாறன் மரணத்துக்கு பா.ரஞ்சித் இரங்கல்

மாறன்

மாறன்

சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் மாறனின் மறைவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது இரங்கலை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

    மாறனுக்கு வயது 48. கில்லி படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்திலும், வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் நண்பராகவும் நடித்ததன் மூலம் இவர் புகழ் பெற்றார். தலைநகரம் படத்தில் வடிவேலு சொல்லும் நானும் ரவுடிதான் நகைச்சுவை காட்சி இவரை பெரிதும் பிரபலப்படுத்தியது. தற்போது சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    இந்நிலையில் மாறனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். ”கடக்க முடியாத துயரம். எப்போதும் கட்டுக்கடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தைக் கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை. நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள்” என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

    ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாஞ்சா கண்ணன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாறன். ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: