ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘தல அஜித் சாருக்கு நன்றி’: சார்பட்டா பரம்பரை நடிகரின் உணர்ச்சிமிகு இன்ஸ்டா பதிவு!

‘தல அஜித் சாருக்கு நன்றி’: சார்பட்டா பரம்பரை நடிகரின் உணர்ச்சிமிகு இன்ஸ்டா பதிவு!

ஜான் கொக்கென்

ஜான் கொக்கென்

அஜித்துடன் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் ஜான் கொக்கென், இவர் மாபெரும் ஹிட் படங்களான கே.ஜி.எஃப் சாப்டர் 1 மற்றும் பாகுபலி முதல் பாகத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆர்யா நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜான் கொக்கென், அப்படத்தில் தனது கதாபாத்திரத்தை தல அஜித்துக்கு அர்ப்பணிப்பதாக இன்ஸ்டாவில் உணர்ச்சிமிகு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அஜித்துடன் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் ஜான் கொக்கென், இவர் மாபெரும் ஹிட் படங்களான கே.ஜி.எஃப் சாப்டர் 1 மற்றும் பாகுபலி முதல் பாகத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர்.

ஆர்யாவுடன் நடிகர் ஜான் கொக்கென்.

வெற்றிப்பட இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கி பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா தவிர்த்து, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உட்பட பல நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர். இதில் வேம்புலி மற்றும் டான்ஸிங் ரோஸ் ஆகிய கதாபாத்திரங்களுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளன.

சார்பட்டா பரம்பரை

விமர்சன ரீதியில் கொண்டாடப்பட்டு வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் 'வேம்புலி' கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பை நடிகர் அஜித்துக்கு சமர்ப்பித்திருக்கிறார் நடிகர் ஜான் கொக்கென்.




 




View this post on Instagram





 

A post shared by John Kokken (@highonkokken)



இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நன்றி தல அஜித் சார். எப்போதும் என்னை உத்வேகப்படுத்தினீர்கள், என்னையே நம்புவதற்கும் நீங்கள் தான் ஊக்கப்படுத்தினீர்கள். வீரம் படத்தின் ஷூட்டிங் நாட்களில் உங்களுடன் செலவிட்ட நேரம் எனக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத்தந்தது.

அஜித்

ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள். இந்த வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஜித்தை பாராட்டி கேரள நடிகரான ஜான் கொக்கென் வெளியிட்டிருக்கும் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. அஜித் ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Actor Ajith, Sarpatta parambarai