முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மகேஷ் பாபு படத்தில் நரசிம்ம சுவாமி குறித்து சமுத்திரக்கனி சர்ச்சை வசனம்… மன்னிப்பு கேட்டார் இயக்குனர்

மகேஷ் பாபு படத்தில் நரசிம்ம சுவாமி குறித்து சமுத்திரக்கனி சர்ச்சை வசனம்… மன்னிப்பு கேட்டார் இயக்குனர்

மகேஷ் பாபு - சமுத்திரக்கனி

மகேஷ் பாபு - சமுத்திரக்கனி

நரசிம்ம சுவாமியை, வில்லனுடன் ஒப்பிட்டு விட்டதாக கூறி சர்ச்சைகள் எழுந்தன.

  • Last Updated :

நரசிம்ம சுவாமி குறித்த சர்ச்சை வசனத்தை, மகேஷ் பாபு படத்தில் சமுத்திரக்கனி பேசியிருந்த நிலையில், அதுகுறித்து படத்தின் இயக்குனர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு நடிப்பில், ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

வங்கிகள் தங்களிடம் கடன் பெற்றவர்களிடம் இருந்து, கடனை வசூலிப்பதில் பாரபட்சம் காட்டுகிறது என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.

சர்காரு வாரி பாட்டா படத்திற்கு போட்டியாக எந்த பெரிய படமும் களத்தில் இறங்காத நிலையில், இந்தப் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. அடுத்தாக மகேஷ் பாபு ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க - சிறு பட்ஜெட் படங்களையும் உதயநிதி வெளியிட வேண்டும்… இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை

புதையல் வேட்டையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்படவுள்ளது.

இதற்கிடையே சர்காரு வாரி பாட்டா படத்தில் சமுத்திரக்கனி பேசும் வசனம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அவர், ‘நரசிம்ம சாமி மீது சந்தனத்தை பூசி வைக்கிறார்களே ஏன் தெரியுமா? ஏன்னா அவரோட உக்ர ரூபத்துக்கு முன்னாடி சாதாரண மனுஷங்களால நிக்க முடியாது. என்னோட வேற முகத்துக்கு முன்னால உன்னா தாக்குப்பிடிக்க முடியாது’ என்று ஹீரோ மகேஷ் பாபுவை பார்த்து பேசுவார்.

இதையும் படிங்க - வன விலங்குகளின் தாக்குதலை எதிர்கொண்ட வெற்றிமாறன் படக்குழுவினர்… ஆம்புலன்சுடன் நடைபெறும் படப்பிடிப்பு…

இந்த காட்சியில் நரசிம்ம சுவாமியை, வில்லனுடன் ஒப்பிட்டு விட்டதாக கூறி சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் பரசுராம், சிம்மாச்சலம் நரசிம்ம சுவாமிகள் கோயிலுக்கு சமீபத்தில் சென்றார். அப்போது இந்த விவகாரம் அவரிடம் எழுப்பப்பட்ட சமயத்தில், பக்தர்களிடம் அவர் மன்னிப்பு தெரிவித்தார்.

top videos

    சர்காரு வாரி பாட்டா திரைப்படம் வெற்றிகரமாக 10வது நாளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் மட்டும் இந்தப் படம் ரூ. 171 கோடியை வசூலித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Mahesh babu, Samuthirakani