ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷாருக்கான் படமும் சர்தார் கதையும் ஒன்னுதானா? டீகோட் செய்த ஃபேன்ஸ்! கலாய்த்த எடிட்டர்!

ஷாருக்கான் படமும் சர்தார் கதையும் ஒன்னுதானா? டீகோட் செய்த ஃபேன்ஸ்! கலாய்த்த எடிட்டர்!

கார்த்தியின் சர்தார் மற்றும் அட்லியின் ஜவான்

கார்த்தியின் சர்தார் மற்றும் அட்லியின் ஜவான்

Sardar Vs Jawan | கார்த்தி நடித்து வெளியாக உள்ள சர்தார் படம் வரும் 21ம் தேதி வெளியாக போகிறது.சில நாட்களுக்கு முன்னர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கார்த்தி நடித்து வெளியாக உள்ள சர்தார் படம் வரும் 21ம் தேதி வெளியாக போகிறது.சில நாட்களுக்கு முன்னர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த ட்ரைலர் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது. பலர் ட்ரைலர் பார்த்து நிறைய கமெண்டுகளை பகிர்ந்தனர்.

  ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கார்த்தியின் சர்தார் மற்றும் அட்லியின் ஜவான் இரண்டுமே ஒரே கதை தான் என்று ட்வீட் செய்து இருந்தார்.

  "அப்பா - ரா ஏஜென்ட்

  மகன் - போலீஸ்

  ஏஜெண்ட் அப்பா ஒரு பணியில் இருக்கும் போது வேறு இடத்தில் நாட்டில் சிக்கிக் கொள்கிறார் (வில்லன் பாத்திரம் காரணமாக), பல ஆண்டுகளுக்குப் பிறகு வில்லனைப் பழிவாங்க அவர் வருகிறார். அங்கு அவர் தனது மகனைச் சந்திக்கிறார். அப்புறம் பிளாஷ்பேக்" என்று ட்வீட் செய்து இருந்தார்.

  அதற்கு சர்தார் பட எடிட்டர் ரூபன் பதில் எழுதி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் " பள்ளி நாட்களில், நம்மில் பெரும்பாலோர் என்னையும் சேர்த்துக் தான் சொல்கிறேன், று

  தலைவர் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த் சகோதரர்கள் என் நினைத்திருப்போம், இதற்கு காரணம் காந்த் என்பது தான்.பிறகு நான் வளர்ந்தேன்.இன்னும் சிலரே குழந்தைப் பருவத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  மேலும் இங்க RAW ஏஜென்ட் வெச்சிது இஷ்டத்துக்கு RAW வா அடிச்சு விடகூடாது" என்று கூறி உள்ளார் .

  பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகிறது. இந்தப் படத்தை இரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஸ்பை த்ரில்லர் ஆக்ஷன் ஜேனரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

  இதில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 கேரக்டரில் கார்த்தி இடம்பெற்றுள்ளார். ஜிவி பிரகாஷ் சர்தார் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்துடைய டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது.

  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது. அதில் நடிகர் கார்த்தி, நடிகைகள் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், இயக்குனர் பி.எஸ்.மித்ரன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  அந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, சர்தார் படம் 1980 காலகட்டத்தில், நாடக நடிகர் ஒருவர் ராணுவத்திற்கு சென்று உளவாளியாகிறான் என்ற ஒரு வரி கதையை கூறினார். அந்த ஐடியா மிகவும் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு அந்தக் கதையை எழுதத் தொடங்கினார். கதை முழுமை அடைந்தபோதுதான், சர்தார் திரைப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியானது.

  ஜவான்:

  ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘ஜவான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

  அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துவரும் ஜவான் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

  Read More: துணிவு ஷூட்டிங் : அது அஜித் சாரா? சென்னையில் குவிந்த கூட்டம்... ஆனா நடந்த கதை வேறு!

  அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bollywood, Tamil Cinema