ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்தார் படத்தில் எனது கேரக்டர் இதுதான்… சஸ்பென்ஸை உடைத்த ராஷி கன்னா!

சர்தார் படத்தில் எனது கேரக்டர் இதுதான்… சஸ்பென்ஸை உடைத்த ராஷி கன்னா!

நடிகை ராஷி கன்னா

நடிகை ராஷி கன்னா

சர்தார் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ‘சர்தார்’ படத்தில் தனது கேரக்டர் குறித்து பேசி, நடிகை ராஷி கன்னா சஸ்பென்ஸை உடைத்துள்ளார். சர்தார் திரைப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.

  கார்த்தி, ராஷி கன்னா, லைலா உள்ளிட்டோர் நடிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

  தீபாவளியையொட்டி வரும் வெள்ளியன்று சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

  இதன் தொடர்ச்சியாக படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராஷி கன்னா ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், சர்தார் படத்தில் தனது கேரக்டர் குறித்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில்,  ‘சர்தார் படத்தில் போல்டான பெண் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். சமூகப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தும், சண்டையிடும் பெண்ணாக அந்த கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

  எது சரி? எது தவறு? என்பதில் மிகத் தெளிவான பெண்ணாக இந்த கதாபாத்திரம் இருக்கும். நானும் கார்த்தியும் இடம்பெறும் சீன்களில் உள்ள வசனங்கள் நிச்சயமாக ரசிகர்களை ஈர்க்கும். சினிமாத்தனம் இல்லாமல் வசனங்கள் மிக இயல்பாக அமைந்துள்ளன. ரொம்ப சீரியஸான, சுதந்திரமான பெண்ணாக சர்தார் படத்தில் நான் நடித்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

  கண்ணாடி முன் நின்று கலக்கல் போட்டோஷூட் செய்த ஸ்ரேயா!

  சர்தார் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உளவாளி என இரண்டு கேரக்டர்களில் கார்த்தி நடித்துள்ளார். முன்பு அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத காட்சிகள் சர்தார் படத்தில் இடம்பெற்றிருக்கும்’ என்று ராஷி கன்னா கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress Raashi Khanna, Kollywood