ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘தேங்க் யூ மக்களே!’ – சர்தார் பட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கார்த்தி ட்வீட்

‘தேங்க் யூ மக்களே!’ – சர்தார் பட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கார்த்தி ட்வீட்

சர்தார் படத்தில் கார்த்தி

சர்தார் படத்தில் கார்த்தி

தீபாவளியையொட்டி சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சர்தார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சர்தார் படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதற்காக நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் மோசடி குறித்து படமாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்திய பி.எஸ்.மித்ரன், சர்தார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கார்த்தியுடன், லைலா, ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், ராமதாஸ், சிறுவன் ரித்விக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தண்ணீரை வியாபாரமாக பார்க்காமல், ஆதாரமாக பார்க்க வேண்டும் என்பதை சர்தாரில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

    தண்ணீர் முதலாளித்துவ கட்டுப்பாடில் சென்றால் என்னவாகும்? அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் விளைவுகள் என்னென்ன? பாட்டில் தண்ணீரால் கேன்சர் உள்ளிட்ட கொடூர நோய்கள் உருவாகுமா? இந்த கதைக்கும் இந்திய உளவாளிக்கும் இருக்கும் தொடர்பு என்ன? என்பதை விறு விறுப்பான திரைக்கதையில் கூறியுள்ளார் பி.எஸ்.மித்ரன்.

    சமூக விளைவுகளை ஏற்படுத்திய காந்தாரா… தெய்வ நர்த்தகர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை அறிவிப்பு…

    இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். இரும்புத்திரை போலவே இந்தப் படத்திலும் ஏராளமான Detailing காட்சிகள் உள்ளன. அதற்காக பி.எஸ்.மித்ரன் மிகவும் மெனக்கெட்டுள்ளார். அதற்கு பலன் திரையில் தெரிகின்றன.

    தீபாவளியையொட்டி சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சர்தார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    Chinmayi: நம்ம ஊர் பொறுக்கிங்க ரத்தத்துலயே ஊறினது... தன் குழந்தைகளை விமர்சித்த நெட்டிசனுக்கு சின்மயி பதிலடி

    இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ‘நன்றி மக்களே… சர்தார் படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்களது வரவேற்பால் சர்தார் படக்குழுவினர் அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

    சர்தார் மற்றும் பிரின்ஸ் படத்திற்கு ஏறக்குறைய சமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சர்தாருக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi