உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் தி லெஜெண்ட் பிரமாண்ட ரிலீஸ்…
உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் தி லெஜெண்ட் பிரமாண்ட ரிலீஸ்…
தி லெஜெண்ட் திரைப்படத்தில் சரவணன்
The Legend Movie : லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் இம்மாதம் 28-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தி லெஜெண்ட் படத்தை பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின், கோபுரம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. மற்ற மொழிகளிலும் முன்னணி விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வெளியிடுவதால் படம் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலதிபர் சரவணா ஸ்டோர் சரவணன் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஜேடி - ஜெர்ரி இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த படத்தின் வெளிநாடுகளில் வெளியீடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சரவணனுடன் இந்தி முன்னணி நடிககை ஊர்வசி ரவுத்தலா நாயகியாக நடித்துள்ளார். அதேபோல் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.