Home /News /entertainment /

தி லெஜெண்ட் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… டிக்கெட் ரிசர்வேஷன் தொடக்கம்

தி லெஜெண்ட் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… டிக்கெட் ரிசர்வேஷன் தொடக்கம்

தி லெஜண்ட் பட ஹீரோ சரவணன்

தி லெஜண்ட் பட ஹீரோ சரவணன்

சரவணனுடன், பிரபு, நாசர், விவேக், விஜய்குமார், சுமன், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, பூர்ணிமா பாக்யராஜ், மன்சூர் அலிகான், ஹரிஷ் பேரடி, முனிஷ்காந்த், ராகுல் தேவ், சிங்கம்புலி, மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சரவணன் நடித்துள்ள தி லெஜெண்ட் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கானடிக்கெட் ரிசர்வேஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மொத்தம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடக் கூடியதாக தி லெஜெண்ட் திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழை தணிக்கை வாரியம் அளித்துள்ளனர்.

    இந்த வாரம் வியாழக் கிழமை படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களில் 4 மணி மற்றும் 5 மணிக்கான காட்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்...

    உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும் தொழில் அதிபருமான சரவணன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் சரவணனுடன், பிரபு, நாசர், விவேக், விஜய்குமார், சுமன், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, பூர்ணிமா பாக்யராஜ், மன்சூர் அலிகான், ஹரிஷ் பேரடி, முனிஷ்காந்த், ராகுல் தேவ், சிங்கம்புலி, மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுத்தலா தமிழில் அறிமுகமாகிறார்.

    மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த படத்தின்  வெளிநாடுகளில் வெளியீடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி