ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

8 வருடம் கழித்து ஆண் குழந்தையை பெற்ற பிரபல சரவணன் மீனாட்சி ஜோடி!

8 வருடம் கழித்து ஆண் குழந்தையை பெற்ற பிரபல சரவணன் மீனாட்சி ஜோடி!

செந்தில் - ஸ்ரீஜா

செந்தில் - ஸ்ரீஜா

மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சின்னத்திரை நடிகை ஸ்ரீஜா செந்தில் ஆண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார்.

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான தொடர் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இந்த நெடுந்தொடரை விரும்பி பார்த்தனர். இதில் சரவணன் ரோலில் மிர்ச்சி செந்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா சந்திரன் மீனாட்சியாக நடித்தார். கேரளாவை சேர்ந்த இவர், இதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இந்த சீரியலில் சரவணன் - மீனாட்சி ஜோடியின் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்து போனது. ரீல் ஜோடியான இவர்கள் நிஜத்தில் இணைந்தாலும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். ஒருகட்டத்தில் அதுவும் நிஜமானது. மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா நடிப்பதை நிறுத்தினார். மிர்ச்சி செந்தில் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் கடைசியாக நடித்த நாம் இருவரும் நமக்கு இருவர் தொடர் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.




 




View this post on Instagram





 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)



இதற்கிடையே தனது மனைவி ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டகிராமில் அறிவித்தார் செந்தில். இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, ”பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று” என்று இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார் செந்தில். இதையடுத்து அவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv