Home /News /entertainment /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் சரத்குமார் - பார்த்திபன் தோற்றம் வெளியீடு!

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் சரத்குமார் - பார்த்திபன் தோற்றம் வெளியீடு!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையராக நடிக்கும் சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

    பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, பலரின் காலர் ட்யூனாக மாறியது. இதற்கடுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ’சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியானது. கடந்த வாரம் அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.

    தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இதற்கிடையே படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையராக நடிக்கும் சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி