ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன்

சரத்குமாரின் 150-வது படம் தி ஸ்மைல் மேன்

சரத்குமார்

சரத்குமார்

பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் திரைக்கதையுடன் இந்தப் படம் தயாராவதாக இதன் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கும் ஆனந்த் கூறியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சரத்குமார் தனது 150வது திரைப்படத்தை எட்டியியிருக்கிறார். அனைத்து நடிகர்களுக்கும் 150வது திரைப்படம் என்பது மைக்கல். இருப்பதிலேயே சிறந்த கதையை தேர்வு செய்து நடிக்க விரும்புவார்கள். அந்த வகையில் சரத்குமார் தேர்வு செய்திருக்கும் திரைப்படம் தி ஸ்மைல் மேன்.  இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லரான  இதனை ஷ்யாம் - பிரவீன் இயக்குகிறார்கள். இவர்கள் வெற்றி நடித்திருக்குகும்  மெமரிஸ் படத்தை இயக்கியவர்கள். மெமரிஸ் இன்னும் வெளிவரவில்லை.

அல்சைமர் என்ற மறதி நோய் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சரத்குமார் இதில் நடிக்கிறார். அவர் தன்னை துரத்திக் கொண்டிருக்கும் முடிக்கப்படாத வழக்கு ஒன்றை மறதி வியாதிக்கு நடுவில் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சொல்லும் திரைப்படம் இது.

பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் திரைக்கதையுடன் இந்தப் படம் தயாராவதாக இதன் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கும் ஆனந்த் கூறியுள்ளார். கோவையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

தி ஸ்மைல் மேன்

Also read... பத்து தல - சிம்புவின் வேடத்தில் தெலுங்கில் நடிக்கும் பாலகிருஷ்ணா!

படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் சரத்குமார் வருகிறார். ஆனால் அவருக்கு ஜோடி கிடையாது. சிஜா ரோஸ்  போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஜார்ஜ் மரியான், ராஜ்குமார் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கிறார்.

இதன் மொத்த படப்பிடிப்பும் கோவையில் நடைபெற உள்ளது.

First published:

Tags: Actor sarath kumar