Home /News /entertainment /

தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா ... நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா ... நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

ஒவ்வொர் திரைப்படத்திலும் மாறுபட்ட பரிமாணங்களில் நடிப்பில் முத்திரை பதித்து தமிழ் சினிமாவின் ஆஸ்தான அம்மா ஆனார் சரண்யா பொன்வண்ணன்.

  நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய ஒரு சிறப்பு பதிவு. தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு நிரந்தர நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவர் சரண்யா பொன்வண்ணன். இப்போது அம்மா வேடங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் இவர் 80களில் தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவர். தன் அறிமுக திரைப்படத்திலேயே கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த இவரைப் பார்த்து வியந்தது தமிழ் சினிமா. ஆம். ‘நாயகன்’ திரைப்படத்தில் சரண்யாவின் வெள்ளந்தி அழகில் விழுநது வானம்பாடி பறவையாய் சிறகடித்தது, தமிழ் சினிமா.

  பக்கத்து வீட்டு பெண் போன்ற சரண்யாவின் தோற்றத்திற்கேற்ப பாந்தமான கதாபாத்திரங்களில் பிரபு, கார்த்திக் என அப்போதைய நாயகர்களின் நாயகி ஆனார் சரண்யா. ’மனசுக்குள் மத்தாப்பு ’ திரைப்படத்தில் மஞ்சள் புடவையில் கையில் சிறு பேக் வைத்து கொண்டு ’பொன் மாங்குயில் சிங்காரமாய் பண் பாடுதே’ என பாடி ஆடும் போதும் .. ’என் ஜீவன் பாடுது’ திரைப்படத்தில் சேலையின் முந்தானையை கையில் ஏந்தியபடி அழகான நெற்றி பொட்டுடன் ‘ஒரே முறை உன் தரிசனம்’ என்று கார்த்திக்கின் தரிசனத்திற்காக ஏங்கி பாடுகையில் சேலை கட்டிய தேவதையையானார் சரண்யா.

  விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. ஹீரோ மீது ரசிகர்களுக்கு கோபமா?

  நாயகியாய் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சரண்யா பின் ‘சீவலப்பேரிபாண்டி’, ‘கருத்தம்மா’, ’பசும்பொன்’ என பல திரைப்படங்களில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனம் கவர்ந்தார். குறிப்பாக 'ராம்', 'தவமாய் தவமிருந்து' போன்ற சீரியஸ் படங்களில் சரண்யா தன்னுடைய அபாரமான நடிப்பால் முத்திரை பதித்து ’அம்மா கதாபாத்திர’ அரியணையில் அழகாய் அமர்ந்தார்.விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் ஒரு பாசக்கார கரிசல் காட்டு தாயாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அள்ளினார் சரண்யா பொன்வண்ணன்.

  காதலோட கடைசி நாள்.. இந்த வலி தேவை தான்! விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு

  'ஆடிபோய் ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்' என்று ’களவாணி’ திரைப்படத்தில் சரண்யா பேசும் வசனம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. மகன் செய்யும் தவறுகளை கணவரிடம் மறைக்கும் பாசமான அம்மா வேடத்தில் நடித்த சரண்யா அதுமுதல் அம்மா பாத்திரங்களில் டாப் ஆனார்.  ’முத்துக்குமுத்தாக,’ ’ஆல்இன்ஆல் அழகுராஜா’ ’நய்யாண்டி’, ‘எம்மகன்’ , 'ஒருகல் ஒரு கண்ணாடி’ உள்ளிட்ட பல படங்களில் அம்மாவாய் அசத்தினார் சரண்யா. 'எம்மகன்' திரைப்படத்தில் சிடுசிடு கணவருக்கும் அப்பாவி மகனுக்கும் இடையில் மாட்டிகொண்டு தவிக்கும் சரண்யாவின் கதாபாத்திரம் அவரின் நகைச்சுவை நடிப்பை சொன்னது. வேலையில்லாப்பட்டதாரி மகளிர்மட்டும் கோலமாவுகோகிலா என ஒவ்வொர் திரைப்படத்திலும் மாறுபட்ட பரிமாணங்களில் நடிப்பில் முத்திரை பதித்து தமிழ் சினிமாவின் ஆஸ்தான அம்மா ஆனார் சரண்யா பொன்வண்ணன்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Actress Saranya, Kollywood, Tamil Cinema

  அடுத்த செய்தி