கார் ஓட்டுநருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை சாரா அலிகான்

பாலிவுட் நடிகை சாரா அலிகானின் கார் ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கார் ஓட்டுநருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை சாரா அலிகான்
நடிகை சாரா அலிகான்
  • Share this:
கேதார்நாத், சிம்பா, லவ் ஆஜ் கல் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்திருந்தவர் சாரா அலிகான். பிரபல பாலிவுட் நடிகரான சயிப் அலிகானின் மகளான இவர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய்குமார் நடிக்கும் 'Atrangi Re' என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில் சாரா அலிகானின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் சாரா அலிகான், எனது கார் ஓட்டுநர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மும்பை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் உடனடியாக தனிமைப்படுத்துதல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

என் குடும்பத்தினருக்கும் இதர பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆதரவாக இருந்த மும்பை மாநகராட்சிக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

 
View this post on Instagram
 

🙏🏻🙏🏻🙏🏻


A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on


முன்னதாக பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பாலிவுட் பிரபலம் அனுபம் கேர் குடும்பத்திலும் நான்கு பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading