Home /News /entertainment /

என் ரிங்குவை சந்தித்ததில் மகிழ்ச்சி... சாரா அலிகானுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

என் ரிங்குவை சந்தித்ததில் மகிழ்ச்சி... சாரா அலிகானுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

தனுஷ் - சாரா அலிகான்

தனுஷ் - சாரா அலிகான்

சாராவின் அந்த பதிவை ஷேர் செய்த தனுஷ், “நன்றி சாரா, என் ரிங்குவை பார்த்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

    கிரே மேன் திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன நடிகை சாரா அலிகானுக்கு தனது ஸ்டைலில் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

    நடிகை சாரா அலி கான் அட்ராங்கி ரே படத்தில் தன்னுடன் நடித்த தனுஷின், ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன், OTT தளமான Netflix-ல் வெளியிடப்பட்டதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். படத்தைப் பார்த்த பிறகு, தனுஷுடன் போஸ் கொடுத்தபடி இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் சாரா அலிகான்.

    "கிரே மேனுக்கு வாழ்த்துகள். வழக்கம் போல் அதில் உங்களை நேசித்தேன்" என்று குறிப்பிட்டிருந்த சாரா அலிகான், "எனது விசு பாபுவை பார்த்தது மகிழ்ச்சி, ஆனந்த் எல் ராயை உண்மையிலேயே மிஸ் செய்கிறேன்" என்றதோடு இதய எமோஜிக்களை பதிவிட்டிருந்தார்.

    நயன்தாரா பெரிய நடிகையா? சர்ச்சைக்குள்ளாகும் பாலிவுட் பிரபலத்தின் கருத்து

    கி க்ரே மேன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இந்தியா வந்துள்ள ருஸ்ஸோ சகோதரர்களுக்காக ரித்தேஷ் சித்வானி வழங்கிய விருந்தில் தனுஷுடன் எடுத்துக் கொண்ட படத்தை தான் இன்ஸ்டகிராமில் பகிர்ந்திருந்தார் சாரா அலிகான். சாராவின் அந்த பதிவை ஷேர் செய்த தனுஷ், “நன்றி சாரா, என் ரிங்குவை பார்த்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ ஆகியோர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷ், ரியான் கோஸ்லிங்குடன் சண்டையிடும் கொலையாளியாக நடித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Dhanush

    அடுத்த செய்தி