சுஷாந்த் சிங் தற்கொலை : பாலிவுட் திரையுலகினரை திட்டி தீர்த்த சப்னா

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பாலிவுட் திரையுலகினரை ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி கடுமையாக சாடி உள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலை : பாலிவுட் திரையுலகினரை திட்டி தீர்த்த சப்னா
  • Share this:
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. இளம்வயதில் நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மனஅழுத்தத்துடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சீரியிலில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் அதன்பின் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர்.


நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு திரைபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பாலிவுட் திரையுலகினரை கடுமையாக சாடியுள்ளார் ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி. இவர் சுஷாந்த் சிங் தோழியும் ஆவார். இவர் தான் சுஷாந்த் சிங்கின் போட்டோ ஷூட்களுக்கும், அவருக்கும் தனிப்பட்ட ஸ்டைலிஸ்ட்டாக இருந்தவர். மகேந்திர சிங் தோனிக்கும் தனிப்பட்ட ஹேர் ஸ்டைலிஸ்ட் இவர் தான்.

சுஷாந்த் சிங்கின் மறைவு குறித்து சப்னா பாவ்னானி தனது ட்விட்டர் பதிவில், "கடந்த சில வருடங்களில் சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எந்த ஒளிவும் மறைவும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை, அவருக்கு உதவ கைகொடுக்கவும் இல்லை. உண்மையில் சினிமாத்துறை எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதற்கு இன்று வரும் ட்வீட்களே சாட்சி. இங்கே யாரும் உங்களுக்கு நண்பன் இல்லை“ என்றுள்ளார்.
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading