முகப்பு /செய்தி /entertainment / சுய அன்பின் முக்கியத்துவம் குறித்து ஷேர் செய்த பிரபல நடிகை சன்யா மல்ஹோத்ரா...

சுய அன்பின் முக்கியத்துவம் குறித்து ஷேர் செய்த பிரபல நடிகை சன்யா மல்ஹோத்ரா...

சன்யா மல்ஹோத்ரா

சன்யா மல்ஹோத்ரா

Sanya Malhotra | தனக்கு 30 வயதை எட்டுவதை பற்றிய தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட சன்யா மல்ஹோத்ரா, ஒருவர் தன்னைப் பற்றியும், அவர்களின் விருப்பு வெறுப்புகள் பற்றியும், தங்கள் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியும் தெளிவுபடுத்தும் வயது இது என்று தான் நம்புவதாக குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

தங்கல் திரைப்பட நடிகை சன்யா மல்ஹோத்ரா (Sanya Malhotra) தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடந்த 2016-ல் விளையாட்டை மையமாக வைத்து வெளியான திரைப்படமான தங்கல் மற்றும் 2018-ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமான படாய் ஹோ ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் இவர்.

இவை இரண்டுமே அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களாக உள்ளன. தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பிரபலங்களில் ஒருவராக இருக்கிறார் நடிகை சன்யா மல்ஹோத்ரா. மனதில் தோன்றுவதை அப்படியே ஷேர் செய்ய தயங்காத சன்யா மல்ஹோத்ரா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உடற்பயிற்சி, தன்னை ஏற்று கொள்வது மற்றும் சுய அன்பின் முக்கியத்துவம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனக்கு 30 வயதை எட்டுவதை பற்றிய தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட சன்யா மல்ஹோத்ரா, ஒருவர் தன்னைப் பற்றியும், அவர்களின் விருப்பு வெறுப்புகள் பற்றியும், தங்கள் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியும் தெளிவுபடுத்தும் வயது இது என்று தான் நம்புவதாக குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் நம்மை நாமே ஏற்று கொள்ளும் சுய-அன்பு (Self-Love) பற்றியும், தனது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும்முன்னுரிமை அளிக்க தொடங்கியது எவ்வாறு என்பதை பற்றியும் நடிகை சன்யா பேசினார். "மற்றவர்களுக்காக நீங்கள் செய்ய விரும்பும் செயல்களை செய்யாமல் விட்டு கொடுக்கும் நேரங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் எனது தேவைகளை மட்டுமே முழுவதுமாக முதன்மையா கருதி செயல்படுகின்றேன். மற்றவர்களிடம் நீங்கள் எப்படி அன்பாக இருக்கிறீர்களோ, அதே போல உங்களிடமும் நீங்கள் அன்பாக இருங்கள்.

உங்கள் மீதான சுய அன்பை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காகவும் வாழுங்கள்" என குறிப்பிட்டு உள்ளார்.

பிகினி அணிவது பற்றி..தன்னை தானே ஏற்று கொண்டது பற்றி குறிப்பிட்ட நடிகை, என உடலுக்கு வசதியான மற்றும் நன்றாக உணரக்கூடிய வகையிலான உடையை அணிய எனக்கு நேரம் பிடித்தது. எனினும் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற விஷயங்களை எல்லாம் தாண்டி எனது வாழ்க்கையை ரசிக்க நான் மிக அதிக நேரம் காத்திருக்கவில்லை.

ALSO READ | நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு… பொதுமக்கள் மாஸ்க் அணிய வலியுறுத்தல்

 

எனக்கு பிகினி அணிய பிடிக்கும் என்றால் அதையும் கூட நான் அணிவேன், காத்திருக்க மாட்டேன் அது எனது விருப்பத்தை பொறுத்தது என்றார்.மாதவிடாய் கால நிகழ்வுகள் போன்றவற்றை பற்றியும் பேசிய அவர், உங்கள் உடலைப் பொறுத்தவரை, நீங்கள் யாருக்கும் விளக்கம் கொடுக்கவோ பதிலளிக்கவோ கூடாது. உங்களுக்கு முகப்பரு இருந்தால், அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை வெளிப்படையாக காட்டுங்கள், உடலில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகள் தானே அவை என்றார்.

தனது உடற்பயிற்சி வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து வரும் இவர், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேட்டியில் வலியுறுத்தி உள்ளார்.

First published:

Tags: Bollywood, Bollywood actress