28 ஆண்டுகள் கழித்து ரஜினியோடு இணையும் பிரபலம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம்

Web Desk | news18
Updated: February 11, 2019, 12:31 PM IST
28 ஆண்டுகள் கழித்து ரஜினியோடு இணையும் பிரபலம்!
சந்தோஷ் சிவன் - ஒளிப்பதிவாளர்
Web Desk | news18
Updated: February 11, 2019, 12:31 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ஒளிப்பதிவாளராகி இருப்பதாக, சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் முதல்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. நடிகர்கள் நடிகைகளுக்கானத் தேர்வை விரைவில் முடித்துவிட்டு, மார்ச் மாதத்தில் படப்பிடிப்பைத் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Rajinikanth | A.R.Murugadoss, ரஜினிகாந்த்| ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினிகாந்த் | ஏ.ஆர்.முருகதாஸ்


இந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சந்தோஷ் சிவன் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன்  இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
Loading...


தளபதி படத்தில் கேமராமேனாக பணியாற்றிய சந்தோஷ் சிவன், அதன்பின் 28 ஆண்டுகள் கழித்து ரஜினியின் அடுத்த படத்தில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...  என் வாழ்வில் இந்த 3 ஆண்கள் முக்கியமானவர்கள் - சவுந்தர்யா ஒபன் ஸ்டேட்மெண்ட் 
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...