முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / AK 62 படத்திற்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணன்?

AK 62 படத்திற்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணன்?

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

அஜித் 62 என்ற தற்காலிக தலைப்புடன் உருவாகவுள்ள  திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவும் முயற்சிக்கின்றனர். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்தின்  62 ஆவது படத்திற்கு இசை அமைக்க  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி  வெளியான துணிவு திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படம் நேருக்கு நேர் மோதியது. இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வசூலை வாரிக் குவித்தன.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தன்னுடைய 62 வது படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கான கதையை  விக்னேஷ் சிவன்  முழுமையாக தயார் செய்யாத காரணத்தால் அஜித் 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார்.

அதன் காரணமாக தற்போது தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.  இதற்கான அறிவிப்பு மிக மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் 62 என்ற தற்காலிக தலைப்புடன் உருவாகவுள்ள  திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவும் முயற்சிக்கின்றனர்.  அஜித் - மகிழ் திருமேனி இணையும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Music director santhosh narayanan