‘கோலமே’ எனக்கு மிகவும் பிடித்த பாடல் - சந்தோஷ் நாராயணன்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தில் இடம்பெற்றுள்ள கோலமே பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை அடுத்து ஜூன் 19-ம் தேதி கீர்த்து சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள கோலமே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் சுஷா இந்தப் பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் இசையமைக்கப்பட்ட முதல் படம் இது. இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் எனக்கு கொடுத்த சுதந்திரம் பாடல் நன்றாக வர உதவியுள்ளது. பல தொலைதூர இடங்களிலிருந்து பணிபுரிந்த எனது குழுவினருக்கும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இர்ய்வருக்கும் என் மீது முழு நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.


கோலமே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஏனெனில் இது முழு தனிமையில் உருவாக்கபட்டது. எனக்குள் இருந்த இசை திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்தது. படத்தில் இந்தப் பாடல் பொருத்தமாக அமைந்துள்ளது. சுஷா சிறப்பாக பாடியுள்ளார்.” என்று கூறியுள்ளார்.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனது குழந்தையைக் காப்பாற்ற போராடும் தாயாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் 24-வது படம்.மேலும் படிக்க: சம்பளத்தைக் குறைத்து கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading