முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சார்பட்டா 2 இசையமைப்பாளர் சர்ச்சை - ஆர்யாவிடம் சந்தோஷ் நாராயணன் என்ன சொன்னார் தெரியுமா?

சார்பட்டா 2 இசையமைப்பாளர் சர்ச்சை - ஆர்யாவிடம் சந்தோஷ் நாராயணன் என்ன சொன்னார் தெரியுமா?

ஆர்யா - சந்தோஷ் நாராயணன்

ஆர்யா - சந்தோஷ் நாராயணன்

அவரது பதிவில் பா.ரஞ்சித்தையும் குறிப்பிட்டுள்ளதால், சார்பட்டா 2 ஆம் பாகத்தில் சந்தோஷ் இணைவதை உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

  • News18 India
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த திரைப்படம் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது என பா.ரஞ்சித் அறிவித்திருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த திரைப்படத்திலும் இடம்பெறுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் முதல் பாகத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். அவரின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருந்தது.

ஆனால் தற்போது பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கடுத்து பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தென்மா இசையமைத்த நிலையில், அவர் தற்போது இயக்கி வரும் தங்கலான் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கு இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இதனையடுத்து ஆர்யாவுக்கு பதிலளித்துள்ள சந்தோஷ் நாராயணன், வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை என சந்தோஷ் நாராயணன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் பா.ரஞ்சித்தையும் குறிப்பிட்டுள்ளதால், சார்பட்டா 2 ஆம் பாகத்தில் சந்தோஷ் இணைவதை உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

First published:

Tags: Actor Arya, Music director santhosh narayanan, Pa. ranjith