இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குத்தாட்டம் - கவனம் பெறும் வீடியோ

சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் குத்தாட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

 • Share this:
  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் குத்தாட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

  ’அட்டக்கத்தி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், தனது சிறப்பான இசையால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். பின்னர் ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ’காலா’, ‘பைரவா’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் சிறப்பான பாடல்களைக் கொடுத்தார்.  தற்போது தனுஷின் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ’சியான் 60’ படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். தவிர சமீபத்தில் இவர் இசையமைத்த ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  Enjoy Enjaami: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு பிரபலங்களின் அசத்தல் நடனம்! – வீடியோ

  இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, அதற்கு சந்தோஷ் நாராயணன் குத்தாட்டம் போடுகிறார். ”சியான் 60 படத்திற்கான அமர்வுக்கு பின், என் அன்புக்குரிய ஃபோக் இசைக்குழுவினருடன்” என்ற தலைப்பில் அந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், ’குத்தாட்டம் போடுவதற்கு ஏதுவாக விக்ரம் படத்திற்கு மரண குத்தாக மியூசிக் போடுங்கள்’ என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: