எங்க கிட்டையும் சைக்கிள் இருக்கு... களத்தில் இறங்கிய சந்தோஷ் நாராயணன் - வேம்புலி!

சந்தோஷ் நாராயணன் - வேம்புலி

கபிலனும் ரங்க வாத்தியாரும் சைக்கிளில் செல்லும் காட்சியை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

 • Share this:
  சார்பட்டா பரம்பரை கபிலன் - வாத்தியார் சைக்கிளில் செல்லும் காட்சியை ரீ-கிரியேட் செய்துள்ளனர் படக்குழுவினர்.

  ’காலா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1970-களில் பிற்பகுதியில் நடக்கும் கதையான சார்பட்டா படம், குத்துச் சண்டையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது.  இந்தப் படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. குறிப்பாக கபிலனும் ரங்க வாத்தியாரும் சைக்கிளில் செல்லும் காட்சியை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது மனைவி மீனாட்சியை சைக்கிளில் அமர வைத்து, ‘என்ன வேலை செய்ய விடுங்க வாத்தியாரே’ எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதோடு வேம்புலியும், துரைக்கண்ணு வாத்தியாரை சைக்கிளில் அமர வைத்து, ‘வாங்க வாத்தியாரே நாமளும் ஊர் சுத்திட்டு வருவோம்’ என்றவாரு சில படங்களை பகிர்ந்திருந்தார். இந்தப் படங்களும், இதை வைத்து கிரியேட் செய்யப்பட்ட மீம்களும் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: