சந்தானம் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் கடைசியாக டிக்கிலோனா வெளியாகி வரவேற்பு பெறாமல் போனது . சர்வர் சுந்தரம் , சபாபதி உள்பட சில படங்கள் வெளியாக உள்ளன . இந்நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் . இதன் பர்ஸ்ட் லுக்கை இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் .
ஏஜென்ட் கண்ணாயிரம் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக் . ஒரு சாதாரண டிடெக்டிவ் ஒரு முக்கியமான கொலை வழக்கை கண்டுபிடிப்பது கதை . சீரியஸாக இல்லாமல் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டிருந்த நாயகன் கதாபாத்திரமே இந்தப் படத்தின் முதல் வெற்றி . நவீன் பொலிஷெட்டி இந்த வேடத்தை சிறப்பாக செய்திருந்தார் . ஸ்வரூப் இயக்கம் . 2019 இல் வெற்றி பெற்ற தெலுங்குப் படங்களில் இதுவும் ஒன்று .
ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா படத்தின் அனைத்து அம்சங்களிலும் நகைச்சுவை இழையோடும் . நாயகனின் டிடெக்டிவ் கம்பெனியின் பெயர் எஃப்பிஐ . அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் பெயர் . ஆனால் , படத்தில் இதன் விரிவாக்கம் ஃபாத்திமா பியூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் . ஒரு கொலை குறித்து துப்பறியப் போகும் நாயகனை போலீஸ் கொலையாளி என சிறையில் தள்ளுகிறது . அங்கு ஒரு நபரை நாயகன் சந்திக்கிறான் . அவரது மகளை யாரோ கடத்தி கொலை செய்திருக்கிறார்கள் . அவரது மகள் கடைசியாக பேசியது என மூன்று தொலைபேசி எண்களை தருகிறார் . அந்த தடயத்தை தொடர்ந்து போகும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் , மர்ம முடிச்சுகள் என சுவாரஸியமாக படத்தை எடுத்திருப்பார்கள் .
Also read... துபாயில் தொடங்கிய இந்தி விக்ரம் வேதா...!
தமிழில் இதனை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்குகிறார் . ரியா சுமன் நாயகி . தெலுங்குப் பட நாயகனின் வெகுளித்தனமான நடிப்பையும் , புத்திகூர்மையையும் சந்தானம் நடிப்பில் கொண்டு வந்தால் , அவருக்கு ஒரு வெற்றி உறுதி . Published by: Vinothini Aandisamy
First published: October 15, 2021, 16:08 IST
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Santhanam , Yuvan Shankar raja