• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓடிடியில் சந்தானத்தின் டிக்கிலோனா - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஓடிடியில் சந்தானத்தின் டிக்கிலோனா - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டிக்கிலோனா

டிக்கிலோனா

சந்தானம் நடிப்பில் கடைசியாக பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சந்தானம் நடிப்பில் மூன்று படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி. இதில் டிக்கிலோனா, சர்வர் சுந்தரம் இரண்டும் ஓடிடியில் வெளியாவதாக முன்பு கூறியிருந்தோம். தற்போது டிக்கிலோனாவின் ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு, அனகா, மொட்ட ராnஜந்திரன், ஆனந்த்ராஜ் நடிப்பில் தயாரான படம் டிக்கிலோனா. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இதில் முதல்முறையாக நடித்துள்ளார். யுவன் இசை. KJR ஸ்டுடியோ படத்தை தயாரித்திருந்தது. காமெடிப் படமான இதனை ஸீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி நேரடியாக வெளியிடுகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்வர் சுந்தரம் படத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்படம் 13 கோடி பட்ஜெட்டில் தயாரானது. அதில் பாதி விலைக்கே ஓடிடி தளங்கள் கேட்பதால் வியாபாரம் தள்ளிப் போகிறது. சர்வர் சுந்தரத்துக்கு முன்னால் சபாபதி வெளியாகவும் வாய்ப்புள்ளது.

Also read... முதல்நாள் வசூலில் ஏமாற்றிய பெல்பாட்டம்...!

சந்தானம் நடிப்பில் கடைசியாக பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியானது. இந்த வருட ஆரம்பத்தில் திரையரங்கில் வெளியான படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றும் கொரொனா அச்சத்தால் அதிகம் வசூலிக்கவில்லை. டிக்கிலோனாவை ஓடிடியில் வெளியிட இதுவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: