முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 5 கெட்டப்-களில் சந்தானம் நடிக்கும் புதிய படம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

5 கெட்டப்-களில் சந்தானம் நடிக்கும் புதிய படம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

சந்தானம்

சந்தானம்

காமெடி, ஃபேன்டஸி ஜேனரில் சந்தானம் நடிக்கவுள்ள படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சந்தானம் கம்பேக் கொடுப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய படம் ஒன்றில் நடிகர் சந்தானம் 5 கெட்டப்களில் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகர் சந்தானம் காமெடியான அறிமுகம் ஆனார். ஆரம்ப கட்டத்தில் காமெடியனாகவே மட்டுமே படங்களில் நடித்து வந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அந்த படம் முதற்கொண்டு தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த டிக்கிலோனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடைசியாக ரிலீசான குலுகுலு திரைப்படத்திற்கு கலவை விமர்சனங்களே கிடைத்தன. இதனால் அடுத்த படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் சந்தானம் உள்ளார்.

அடுத்த லெவலுக்கு சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா! விஷயம் தெரியுமா?

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் சந்தானம் 5 கெட் அப்புகளில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த கோவர்தன் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

காமெடி, ஃபேன்டஸி ஜேனரில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சந்தானம் கம்பேக் கொடுப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

பிரபல தியேட்டரின் ஸ்க்ரீனை கிழித்த தனுஷ் ரசிகர்கள்… எல்லை மீறிய கொண்டாட்டம்

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

சந்தானம் நடிப்பில் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம், சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் உருவாகி வருகின்றன.

First published:

Tags: Actor Santhanam