ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் 'வடக்குப்பட்டி ராமசாமி' - வெளியான புதிய அப்டேட்

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் 'வடக்குப்பட்டி ராமசாமி' - வெளியான புதிய அப்டேட்

சந்தானம்

சந்தானம்

இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் வடக்குபட்டி ராமசாமி படம் சந்தானத்துக்கு மிக மிக்கியமான படமாக கருதப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சந்தானம் சமீபத்தில் இயக்குநர் சுந்தர்.சியுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடினார். நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்தில் விஜய் சேதுபதியும் சந்தானமும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்தில் சந்தானம் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக வெற்றிப்பெறாததால் அவர் மற்ற ஹீரோ படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுவருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஏகே 62 படத்தில் சந்தானத்துக்கு காமெடி வேடமில்லையாம்.

இப்படி இருக்க தற்போது டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்தின் அறிவிப்பு புதிய போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் குலு குலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் வடக்குபட்டி ராமசாமி படம் சந்தானத்துக்கு மிக மிக்கியமான படமாக கருதப்படுகிறது.

First published:

Tags: Actor Santhanam